/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடு பொருட்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை
/
இடு பொருட்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை
ADDED : செப் 08, 2024 10:41 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தில் இடு பொருள் வாங்கும் விவசாயிகளுக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் துவங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள், விதைகள் மற்றும் இடுபொருட்களை, வேளாண் விரிவாக்க மையத்தில் பணம் செலுத்தி வாங்கி வந்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பால், வேளாண் துறையிலும் தற்போது இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில், 12 வேளாண் விரிவாக்க மையங்களில், டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை சேவை துவங்கப்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு மையத்திலும் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, கூகுள் பே, போன் பே போன்ற முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு, இடு பொருள் பெற்று பயன் பெறலாம்.