/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்
ADDED : டிச 03, 2024 06:50 AM

கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில், பள்ளி மாணவர்கள் 'பட், பட்' என பதில் அளித்து திறமையை வெளிப்படுத்தினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. தற்போது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டிகள் நடத்தப்படும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் காத்திருக்கின்றன.
கோவையில் நேற்று, கோவைப்புதுார் சி.எஸ்., அகாடமி இன்டர்நேஷனல், சி.எஸ்., அகாடமி, மற்றும் குனியமுத்துார் நிர்மல மாதா கான்வென்ட் பள்ளிகளில், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சி.எஸ்.அகாடமி இன்டர்நேஷனல்
கோவைப்புதுார் சி.எஸ்.அகாடமி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த, வினாடி-வினா போட்டியில் 118 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'டி' அணியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவன் ஸ்ரீ லக்ஷியா மதன்ராஜ், எட்டாம் வகுப்பு மாணவன் கவின்பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் சோனிதாமஸ் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில், கல்வி இயக்குனர் நித்தியா சுந்தரம், ஆசிரியர்கள் சங்கர், மகாலட்சுமி, பிரின்சி, மேனகா குமரன், பிரசன்னா, பூங்கோதை, சாந்தி, யூனெஸ் ஆகியோர் மாணவர்களை பாராட்டினார்.
சி.எஸ்.அகாடமி
கோவைப்புதுார் சி.எஸ்., அகாடமி பள்ளியில் இருந்து, போட்டியில் 64 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ' ஹெச்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் சர்வேஸ்வரன், தருண் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, துணை முதல்வர் ஸ்மித்தா பாபுராஜ் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்வில், ஆசிரியர்கள் கனகவேல், ஜோதிராய், நுாலகர் கார்த்திகை பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்மல மாதா கான்வென்ட் (ஐ.சி.எஸ்.இ.,/ ஐ.எஸ்.சி.,)
குனியமுத்துார் நிர்மல மாதா கான்வென்ட் பள்ளியில், 56 மாணவர்கள் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'சி' அணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் நவ்யா, தரணிகா ஆகியோர் முதலிடம் பெற்று அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் மேபிள் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி ஆசிரியர் குழு செயலாளர் ஜோஸ்னா, ஒருங்கிணைப்பாளர்கள் சிந்து, அருள்குமார், ஆசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர்.