/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி--வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவியர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி--வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவியர்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி--வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவியர்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி--வினா போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவியர்
ADDED : டிச 18, 2024 12:19 AM

கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல் ; பரிசை வெல்' என்ற வினாடி- வினா போட்டியில், மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 'வினாடி- வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான வினாடி- வினா விருது போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. தற்போது கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன் பதிவு செய்த, 150 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதிலிருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும். இறுதிப்போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் காத்திருக்கின்றன.
* கோவில்பாளையத்தில் உள்ள கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்த போட்டியில் 258 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவு தேர்வு எழுதினர். இதில் 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி- வினா போட்டி நடந்தது.
மூன்று சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, பிரனிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தாளாளர் தேன்மொழி பரிசு வழங்கினார்.
பள்ளி முதல்வர் நந்தினி பாய், முதுகலை தமிழாசிரியர் ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, சோபனா ஆகியோர் உடனிருந்தனர்.