/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி- வினா; அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவ, மாணவியர்
/
மாநகராட்சி பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி- வினா; அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவ, மாணவியர்
மாநகராட்சி பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி- வினா; அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவ, மாணவியர்
மாநகராட்சி பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி- வினா; அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவ, மாணவியர்
ADDED : ஜன 07, 2025 07:08 AM

கோவை,; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல் பதிலளித்து, அரையிறுதிக்கு முன்னேறினர்.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும், 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.
பிற பள்ளிகள் மட்டுமல்லாமல், மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 65 பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து இப்போட்டி நடத்தப்படுகிறது.
முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும்.
* சித்தாபுதுார் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 100 பேர் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் ஸ்ரீ பிரவீன், 9ம் வகுப்பு மாணவர் சாய்வர்ஷன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி உதவி தலைமையாசிரியை அஞ்சு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் பத்மாவதி, கீர்த்தனா, அன்னபூர்ணா, சாந்தி, மரிய பிளாசில் ஆகியோர் உடனிருந்தனர்.
* சித்தாபுதுார் மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 122 பேர் எழுதினர்.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவியர் நட்சத்திரா, ஸ்ரீமதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, தலைமையாசிரியை மாலதி பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் புளோரா, கிருபா, சாந்திமதி ஆகியோர் உடனிருந்தனர்.

