/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவனூரில் மணல் கொள்ளை ஆர்.டி.ஓ., விசாரணை
/
கோவனூரில் மணல் கொள்ளை ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூலை 19, 2011 09:31 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவது குறித்து ஆர்.டி.ஓ., சாந்தகுமார் விசாரணை செய்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இதில் இருக்கும் மணலை சமூக விரோதிகள் சிலர், அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கொள்ளையடித்து வருகின்றனர். இது குறித்து உள்ளூர் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் நேற்று கோவனூரில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது திருமாலூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில், மலைபோல மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில், வீடு கட்ட மணலை குவித்து இருப்பதாக ஆர்.டி.ஓ., விடம் தெரிவித்தனர். இதே போல, கோவனூர்புதூர் உள்ளிட்ட மேலும் சில இடங்களில் மணல் திருட்டு குறித்து பொதுமக்களிடம் ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டார். ஆர்.டி.ஓ., சாந்தகுமார் கூறுகையில்,''மலை போல மணலை குவித்தவர்கள் தெளிவான விளக்கத்தை கூறவில்லை. இது குறித்து
கனிமவளத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

