/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சப் - ஜூனியர் குத்துச்சண்டை: பஞ்சாப் சிறுமியர் அசத்தல்
/
சப் - ஜூனியர் குத்துச்சண்டை: பஞ்சாப் சிறுமியர் அசத்தல்
சப் - ஜூனியர் குத்துச்சண்டை: பஞ்சாப் சிறுமியர் அசத்தல்
சப் - ஜூனியர் குத்துச்சண்டை: பஞ்சாப் சிறுமியர் அசத்தல்
ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
குறிச்சி : தேசிய அளவிலான சப் - ஜூனியருக்கான குத்துச்சண்டை போட்டியில், தமிழக சிறுமியர் இரு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
பிச்சனூரிலுள்ள ஜெ.சி.டி., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கடந்த 24ம் தேதி முதல், தேசிய அளவில், சப்-ஜூனியர் பிரிவில், சிறுமியருக்கான குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. நேற்று பகல் 2.00 முதல் 24 போட்டிகள் நடந்தன. தமிழக சிறுமியர் செல்வநாயகி, ராஜஸ்தானின் ரூபியையும், சுபஸ்ரீ, உத்தரப்பிரதேசத்தின் சாந்தனியையும் வென்றனர். மற்றொரு போட்டியில், ராஜஸ்தானின் இந்தர்பால், தமிழகத்தின் மோதிதாவை வென்றார். இதுபோல, ஜாஸ்வி, சிம்மி, ஜாஷன் பிரீத்தி, மந்தீப் (பஞ்சாப்), ஜமுனா, பிரிசிங்கா (அசாம்), மால்சா மிலங்கி, லாலம் மாவல் (மிசோராம்), ஹலேனா, பக்பி, ஜாரினா (மணிப்பூர்), கிருஷ்ணந்து (கேரளா), கதுல்லாஷிவபிரமணி, கோர்லா (ஆந்திரா), ரோஹிணி சுதர் (கோவா), பார்த்தி, பாவனா கமல், சவிதா (ஹரியானா), குசும் லதா (பீஹார்), சரிதா ( மத்தியபிரதேசம்) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.ஏற்பாடுகளை, ஜெ.சி.டி., கல்லூரி நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.