ADDED : ஜூலை 30, 2011 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, புலியகுளம், மீனா எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
இங்கு 10 அடி ஆழ குழி தோண்டி, 'செப்டிக் டேங்க்' கட்டுமானப்பணி நடக்கிறது. நேற்று மாலை 6.00 மணியளவில் சுவரையொட்டி பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகளை தொழிலாளர்கள் அகற்றினர். ஒடிசா மாநிலம், கானபூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாஸ்கரன்(32) என்பவர் 'செப்டிக் டேங்க்' குழிக்குள் நின்றிருந்தார். பலகைகளை அகற்றியபோது பக்கவாட்டிலிருந்த மண் திடீரென சரிந்தது. இதில், மண் மூடி பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.