/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம சபை கூட்டம் கலெக்டர் வேண்டுகோள்
/
கிராம சபை கூட்டம் கலெக்டர் வேண்டுகோள்
ADDED : ஆக 11, 2011 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : 'ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என, கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும்,வரும் 15ம் தேதி காலை 11.00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், சத்துணவு தொடர்பாக விவாதித்தல், ரேஷன் கடை கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல், நலத்திட்ட பயனாளிகள் பட்டியலை இறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். பொதுமக்கள் தவறா மல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, கருணாகரன் தெரிவித்துள்ளார்.