sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புது பட்ஜெட்டும் போட்டாச்சு; இன்னும் துட்டு வரலை!தேர்தல் வேலை பார்த்த அரசு டிரைவர்கள் புலம்பல்

/

புது பட்ஜெட்டும் போட்டாச்சு; இன்னும் துட்டு வரலை!தேர்தல் வேலை பார்த்த அரசு டிரைவர்கள் புலம்பல்

புது பட்ஜெட்டும் போட்டாச்சு; இன்னும் துட்டு வரலை!தேர்தல் வேலை பார்த்த அரசு டிரைவர்கள் புலம்பல்

புது பட்ஜெட்டும் போட்டாச்சு; இன்னும் துட்டு வரலை!தேர்தல் வேலை பார்த்த அரசு டிரைவர்கள் புலம்பல்


ADDED : ஆக 14, 2011 10:50 PM

Google News

ADDED : ஆக 14, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூர் : சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டியதற்கான சிறப்பு பயணப்படி தொகை, அரசு வாகன டிரைவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

கடந்த சட்டமன்றதேர்தலில், தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் அலுவலர்களாக 10 அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர், மாவட்டநூலக கண்காணிப்பாளர், கூட்டுறவு துணைப்பதிவாளர் உள்பட 10 அதிகாரிகளுக்கு, தேர்தல் பணிகளுக்காக, 10 டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டு, பல வாரங்களாக வாகனம் ஓட்டினர். தொண்டாமுத்தூர் ஒன்றியத்திலிருந்து 2 பேர், குடிநீர்வாரியத்திலிருந்து - 1, சிறுசேமிப்பு பிரிவு - 1, நெடுஞ்சாலைத்துறை - 1 என பல்வேறு துறைகளிலிருந்து, மொத்தம் 10 டிரைவர்கள் தொகுதி முழுக்க அனைத்து பகுதிக்கும் வாகனம் ஓட்டினர். தேர்தல் முடிந்த ஓரிரு நாட்களில், தேர்தல் அலுவலராக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பயணப்படி வழங்கப்பட்டு விட்டது.ஆனால், தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குள்ளாக வழங்க வேண்டிய பயணப்படிதொகை, பல மாதங்களுக்கு மேலாகியும் அரசு வாகன டிரைவர்களுக்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. பயணப்படி வழங்கிடக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இன்னும் பயணப்படி வழங்கப்படவில்லை என்பது அரசு டிரைவர்களின் வருத்தம். அரசு வாகன டிரைவர் ஒருவர் கூறுகையில்,''ஒரு நாளைக்கு ஓட்டும் தூரத்தை பொறுத்து பயணப்படி வழங்கப்படுகிறது. தேர்தல் சமயத்தில் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமான தூரம் வாகனம் ஓட்டியுள்ளோம். கிணத்துக்கடவு உள்பட மாவட்டத்தின் பரவலாக அனைத்து தொகுதிகளில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட்டு விட்டது. எங்களுக்குதான், இன்னும் கிடைக்கவேயில்லை,'' என்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர், எம்.எல்.ஏ.,வாகி, அமைச்சரும் ஆகி விட்டார். புதிய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், சாதாரண டிரைவர்களுக்கு அவர்கள் உழைத்த பணத்தைக் கொடுக்க, இங்குள்ள மேலதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளனர் என்பது இந்த டிரைவர்களின் ஆதங்கம். இதற்குத் தீர்வு காண வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.






      Dinamalar
      Follow us