ADDED : செப் 18, 2011 10:15 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நகராட்சி சார்பில்
ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் நடந்தன.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்
கடந்த சில மாதங்களாக மருத்துவமனை மற்றும் துப்புரவு பணியாளர்களின்
பற்றாக்குறை இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக மருத்துவமனை வளாகம் குப்பை
மயமாய் காணப்பட்டது. அதனால், மருத்துவமனையை மாதம் ஓரிரு முறை சுத்தம் செய்ய
அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு
மருத்துவமனையில் நகராட்சி சார்பில் ஒட்டு மொத்த துப்புரவு பணிகள் நடந்தன.
இதில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினர்
கூறியதாவது: மருத்துவமனையில் நகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள்
நடந்து. சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள்,
மருத்துவமனையின் ஒரு பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாதம்
ஒருமுறை நடந்து வரும் இந்த ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் இரண்டு முறை
நடந்தால் மேலும் மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்
என்றனர்.