/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி கேட்டு தாசில்தார் அலுவலகம் முற்றுகை
/
அடிப்படை வசதி கேட்டு தாசில்தார் அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 23, 2011 09:44 PM
மேட்டுப்பாளையம் : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, உக்கான் நகர் மக்கள்
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில், காபி ஒர்க்ஸ் அருகேவுள்ள உக்கான் நகரில்
105 குடும்பங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக வசிக்கின்றன. இங்கு குடிநீர்
வசதி, சாக்கடை, மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையாம்.
இந்த வசதிகள் செய்து கொடுக்கக்கோரி நேற்று 70 பெண்கள் உள்பட 100க்கும்
மேற்பட்டவர்கள் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாசில்தார் மோகனராஜன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே,
செயல்படாமல் இருந்த பொது குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்,
என கூறினார். பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இப்பேச்சுவார்த்தையில், சிக்கதாசம்பாளையம் வி.ஏ.ஒ., ராஜ்குமார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.