/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றிய அலுவலக வளாகத்தில் பார்த்தீனிய களை அழிப்பு
/
ஒன்றிய அலுவலக வளாகத்தில் பார்த்தீனிய களை அழிப்பு
ADDED : செப் 23, 2011 09:44 PM
அன்னூர் : பார்த்தீனிய களை ஒழிப்புக்கு ஒத்துழைக்கும்படி வேளாண்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
பார்த்தீனிய செடிகளை ஒழிக்க வேளாண்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக, வேளாண்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதி பார்த்தீனிய களை இல்லாத பகுதியாக உருவாக்கப்படுகிறது. அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண், தோட்டக்கலை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த வளா கத்தில் பார்த்தீனிய செடி அழிப்பு பணி நடந்தது. இப்பணியில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குனர் சீனிராஜ் கூறுகையில்,''உலகின் மோசமான களைச்செடிகளுள் பார்த்தீனியமும் ஒன்று. இது விரைவில் பரவக்கூடியது. இதை அழிக்கக் கூட்டு முயற்சி அவசியம். தொண்டு நிறுவனங்கள், நலச்சங்கங்கள், பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்ட குழுக்கள் பார்த்தீனிய களை ஒழிப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்,'' என்றனர். துணை வேளாண் அலுவலர் ரங்கராஜ், உதவி வேளாண் அலுவலர்கள் வேல்முருகன், பசுவராஜ், அகிலன் உள்பட பலர் பங்கேற்றனர்.