தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : ஜூன் 27, 2025 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், இன்று நடக்கிறது.

இன்ஜினியரிங்கில் எந்த துறையை தேர்வு செய்வது, எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள, பெற்றோர், மாணவர்கள் விரும்புகின்றனர். இதை முழுமையாக தெரிந்துக் கொள்ளும் வகையில், 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2025' வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், இன்று நடக்கிறது.

காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது; அனுமதி இலவசம். கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு, கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள படிப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை வழங்குகிறார்.

ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியாக 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறைகள் உட்பட தகவல்களை, அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் விளக்குகிறார்.

எதிர்காலத்தை முடிவு செய்வது குறித்த, இந்த பயனுள்ள நிகழ்ச்சியை மிஸ் பண்ணி விடாதீர்கள் மாணவர்களே, பெற்றோரே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us