/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' நாளிதழ் - ப்ரோசோன் மால் இணைந்து நடத்தும் பொங்கல் விழா
/
'தினமலர்' நாளிதழ் - ப்ரோசோன் மால் இணைந்து நடத்தும் பொங்கல் விழா
'தினமலர்' நாளிதழ் - ப்ரோசோன் மால் இணைந்து நடத்தும் பொங்கல் விழா
'தினமலர்' நாளிதழ் - ப்ரோசோன் மால் இணைந்து நடத்தும் பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2026 05:05 AM

கோவை: கோவை சரவணம்பட்டி சக்தி ரோட்டில் உள்ள ப்ரோசோன் மாலில் பொங்கல் விழா நேற்று நடந்தது.
'தினமலர்' நாளிதழ் - புரோசோன் மால் இணைந்து பொங்கல் விழாவை நேற்று துவக்கியது. வரும் 18 வரை நான்கு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
முதல் நாளான நேற்று மாலை பொதுமக்களுக்கான பொங்கல் விழா போட்டி நடந்தது.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நெருப்போடு விளையாட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
பொதுமக்களுக்கு தை திருநாள் பொங்கல் சமையல் போட்டிகள் நேற்று மாலை 4:30 மணி முதல் நடந்தது. போட்டியில் பங்கேற்க 150 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
உங்களிடம் நிகழ்வு மாலை 5.00 மணிக்கு துவங்கியது. ஒரு மணி நேரத்தில் பொங்கலிட்டு போட்டியை முடித்தனர். மெர்லீஸ் ஹோட்டலை சேர்ந்த சமையல் கலைஞர்கள் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த 10 சுவையான பொங்கலை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்ற 10 பேருக்கும் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் பரிசளிக்கப்பட்டன.
பொங்கல் விழாவை முன்னிட்டு ப்ரோசோன் மாலில் அனைத்து கடைகளிலும் 50 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
எலக்ட்ரானிக் பொருட்கள், கம்ப்யூட்டர், ஆயத்த ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சிறப்பு சலுகை விலையில் வரும் 18 வரை விற்பனை செய்யப்படுகிறது. புரோசோன் மாலில் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் இன்றும் நாளையும் நடத்தப்பட உள்ளன.
தினமலர் நாளிதழ், புரோசான் மால் பொங்கல் சமையல் போட்டியில் பரிசு பெற்றவர்கள்: விஜயலட்சுமி, கலா, ராஜேஸ்வரி, தீபா, கார்த்திக்குமார், கோவர்த்தினி, ரஞ்சிதா, மோகனா, மேகலாதேவி, லட்சுமி, சித்ராஸ்ரீ, அம்மு, இந்துமதி.

