/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 28ல் நடக்கிறது
/
'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 28ல் நடக்கிறது
'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 28ல் நடக்கிறது
'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 28ல் நடக்கிறது
UPDATED : ஜூன் 25, 2025 10:40 AM
ADDED : ஜூன் 24, 2025 10:07 PM

பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி வரும், 28ம் தேதி நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025 வழிகாட்டி நிகழ்ச்சி, பொள்ளாச்சி மாதவா இன் ேஹாட்டலில் வரும், 28ம் தேதி நடக்கிறது.
கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.
![]() |
நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாலை, 3:00 முதல் 6:00 மணி வரை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அத்துடன் இந்தாண்டு எந்த படிப்புக்கு வரவேற்பு உள்ளது, எந்த பாடத்துக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து விளக்கங்களும் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் அஸ்வின், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் ஆகியோர் விரிவான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.