தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி

'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி

'தினமலர்' நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி


ADDED : ஜூன் 26, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை ; பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர, காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவ, 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளமான டி.என்.இ.ஏ., வாயிலாக, இன்ஜி., படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்துகிறது. அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்களும், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். இன்ஜினியரிங்கில் எந்த துறையை தேர்வு செய்வது, எந்த இன்ஜி., படிப்புக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்ற சந்தேகம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உள்ளது. என்ன தான் ஆன்லைன் வாயிலாக, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டாலும், முழுதிருப்தி ஏற்படுவதில்லை.

மாணவர்கள், பெற்றோரின் இக்குழப்பத்தை தீர்க்கவே, 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025 வழிகாட்டி நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நாளை (28ம் தேதி) நடக்கிறது.

கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு, கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை வழங்க உள்ளார்.

ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியாக 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறைகள், 'புரோவிஷனல் அலாட்மென்ட்' பெறுவது உள்ளிட்ட தகவல்களை, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் வழங்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us