/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; 'டக் டக்' என பதிலளித்து அசத்திய மாணவர்கள்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; 'டக் டக்' என பதிலளித்து அசத்திய மாணவர்கள்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; 'டக் டக்' என பதிலளித்து அசத்திய மாணவர்கள்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; 'டக் டக்' என பதிலளித்து அசத்திய மாணவர்கள்
ADDED : டிச 19, 2024 11:57 PM

கோவை; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 48 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் அகிலேஷ் யாதவ், தமீஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் பிரீத்திஅச்சுதன் பரிசுகள் வழங்கினார். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அகிலா, பானுபிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
n அதேபோல், அகர்வால் மெட்ரிக் பள்ளியில், 143 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'எச்' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவி ரித்திகாவர்ஷினி, மாணவர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஜேஸ்மின் பரிசுகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் மோகன்ராஜ், ஜெயஸ்ரீ, ஆசிரியர் பிரேமா ஆகியோர் உடனிருந்தார்.
n வியன் வீணை பப்ளிக் பள்ளியில், 150 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவித்தேர்வு எழுதினர்.
போட்டிகளின் நிறைவில் 'எச்' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவி ஆல்பியா, ஆறாம் வகுப்பு மாணவர் தேஜஸ்வின் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, முதல்வர் முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் நஸ்ரின், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.