/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'
ADDED : ஜன 24, 2025 06:25 AM

கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' சார்பில் நடந்துவந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா முதற்கட்ட போட்டிகளை அடுத்து இன்று எஸ்.எஸ்.வி.எம்., வோர்ல்டு பள்ளியில் இறுதிப்போட்டி நடக்கிறது.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதமாகவும், தேர்வுக்கு தயாராகும் விதத்திலும் கடந்த, 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2024-25ம் ஆண்டுக்கான 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் சார்பில் கடந்தாண்டு அக்., 8ம் தேதி துவங்கியது.
இவர்களுடன், 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக பொது அறிவுத்தேர்வு நடத்தப்பட்டது.
இதிலிருந்து, ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பிடித்த அணி அரையிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. காலிறுதி சுற்றுக்களை அடுத்து இன்று, 150க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்கும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி, கோவை, சிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., வோர்ல்டு பள்ளியில் நடக்கிறது.
காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட பள்ளி அணிகளுக்கு பொது அறிவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறும் எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.
இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளுடன் வெற்றிபெறும் அணிகளுக்கு, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பரிசுகள் வழங்கி கவுரவிக்கிறார். இதில், ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

