/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி : திறமை வெளிப்படுத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
/
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி : திறமை வெளிப்படுத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி : திறமை வெளிப்படுத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி : திறமை வெளிப்படுத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
ADDED : அக் 25, 2025 01:04 AM

கோவை: செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, வினாடி வினா விருது நிகழ்ச்சியில், மாணவ மாணவியர் தங்கள் அறிவுத்திறமையை வெளிப்படுத்தினர்.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் பாடப்பகுதிகள் சார்ந்த அறிவு, பொது அறிவு திறன்களை மேம்படுத்த, வினாடி வினா விருது நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. அதன்படி, நேற்று செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்... செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில் 76 மாணவியர் பங்கேற்றனர். இரண்டாவது சுற்றுக்காக, எட்டு அணிகளில் இருந்து 16 மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
'இ' அணியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி அல்ஷிகா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி சுவீசரா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், 'பி' அணியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி விஷ்ணுபிரியா, எட்டாம் வகுப்பு மாணவி அனபா அஷீரா; 'டி' அணியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி பாண்டியாஷினி, ஏழாம் வகுப்பு மாணவி அஸ்னா; 'எப்' அணியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியர் வர்தினி, ரக்ஷிதா மற்றும் 'எச்' அணியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ருமைசா, பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீ வர்ஷினி ஆகியோர், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி பரிசுகள் வழங்கினர்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்... செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, முதற் சுற்று எழுத்துத் தேர்வில் 50 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இரண்டாவது சுற்றுக்காக, எட்டு அணிகளில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
'இ' அணியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் ஞானதேசிகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வெற்றிவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், 'ஏ' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ரிதிக் ரோஷன், கார்த்திகேயன்; 'பி' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மணிகண்டன், நிகிலேஷ்; 'சி' அணியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் அப்துல் ஹம்மது, எட்டாம் வகுப்பு மாணவர் பாலாஜி மற்றும் 'எச்' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஹரிஹரசுதன், ஹரிவர்ஷன் ஆகியோர், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தேவசகாயம் பரிசுகள் வழங்கினார்.
மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்காக இப்போட்டி தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. 'இப்போட்டியின் மூலம் நாட்டு நடப்புகள், நவீன தொழில்நுட்பம், அரிய செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என, பங்கேற்ற மாணவ - மாணவியர் தெரிவித்தனர்.

