/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவருக்கான தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

ADDED : ஏப் 26, 2025 11:18 PM
கோவை: தினமலர் நாளிதழ் சார்பில், சிறுவர்களுக்கான தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, நாளை துவங்குகிறது.
தினமலர் நாளிதழ் சார்பில், 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்', 'ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ்', 'ஓ.கே., ஸ்வீட்ஸ்'பங்களிப்புடன் 11 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கான, டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி, 'தினமலர் பிரீமியர் லீக்' நாளை துவங்கி, மே 2ம் தேதி வரை, அவிநாசி சாலை சி.ஐ.டி., கல்லுாரி, சரவணம்பட்டி சங்கரா கல்லுாரி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது.
'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும் இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 அணிகள் பங்கேற்கின்றன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரம், கோப்பை, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம், கோப்பை வழங்கப்படுகிறது.
சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், தொடர் நாயகன் விருது மற்றும் ஒவ்வொரு போட்டிக் கும் ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவுள்ளது.