sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பரிசுகளை வென்ற 'தினமலர்' வாசகியர் மார்கழி விழா கோலப்போட்டி

/

 பரிசுகளை வென்ற 'தினமலர்' வாசகியர் மார்கழி விழா கோலப்போட்டி

 பரிசுகளை வென்ற 'தினமலர்' வாசகியர் மார்கழி விழா கோலப்போட்டி

 பரிசுகளை வென்ற 'தினமலர்' வாசகியர் மார்கழி விழா கோலப்போட்டி


ADDED : ஜன 04, 2026 05:38 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் 'தினமலர்' 'மார்கழி விழாக்கோலம்' கோலப் போட்டி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. இந்த கோலப் போட்டியில் அபார்ட்மென்ட்களில் குடியிருக்கும் நம் வாசகியர் பரிசுகளை வென்று வருகின்றனர்.

பி.என்.புதுார் புதுக்கிணறு பகுதியில் உள்ள ரவிமுருகன்ஸ், ராதா அபார்ட்மென்டில் நேற்று கோலப்போட்டி நடந்தது. 38 வாசகியர் பல வண்ணங்களில் ரங்கோலி, புள்ளிக்கோலம் மற்றும் ஓவிய கோலங்கள் வரைந்து, பரிசுகளை வென்றனர்.

ஓவிய கோலத்தில் வாசகியர் ஜியா முதல் பரிசும், லதா சந்திரசேகர் இரண்டாம் பரிசும், ஜோதிமலானி மூன்றாம் பரிசும் பெற்றனர். ரங்கோலி கோலத்தில் சவுதாமணி முதல் பரிசும், ஹர்ஷா மாதவன் இரண்டாம் பரிசும், சிந்துபிரியா மூன்றாம் பரிசும் பெற்றனர். புள்ளி கோலத்தில் வாசகியர் ராதா லட்சுமணன் முதல் பரிசும், மைதிலி இரண்டாம் பரிசும், மஞ்சுளா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

ஆர்ட் கோலத்தில் பரிசு பெற்ற ஜியா கூறுகையில், ''நான் ஓவியக்கல்லுாரியில் பைன் ஆர்ட்ஸ் படித்து வருகிறேன். 'தினமலர்' கோலப்போட்டிக்காக பெயின்ட் பிரஷ்ஷில் வரைவது போல, கோலப்பொடியில் ஓவியக்கோலாமாக வரைந்தேன். பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி,'' என்றார்.

வாசகி லட்சுமி கூறுகையில், ''எனக்கு, 80 வயது ஆகிறது. பத்து வயதில் இருந்து கோலம் போடுகிறேன். வாசலில் கோலம் போட்டால் மகாலட்சுமி வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம்,'' என்றார்.

அசோசியேசன் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சந்தானம் பொருளாளர் சரண்யா, துணைத்தலைவர் சந்திரசேகர், இணைச்செயலாளர் மஞ்சுநாதன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

ஸ்ரீ வத்சா பிளாட்டினம் அபார்ட்மென்ட் இடையர்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ வத்சா பிளாட்டினம் அபார்ட்மென்டில் நடந்த கோலப்போட்டியில், 24 'தினமலர்' வாசகிகள் பரிசுகளை வென்றனர்.

ஓவியக் கோலத்தில் சுபாஷினி முதல் பரிசும், ரேகா இரண்டாம் பரிசும், அபிநயா மூன்றாம் பரிசும் வென்றனர். ரங்கோலி கோலத்தில் மகேஸ்வரி முதல் பரிசும், சுகந்தி இரண்டாம் பரிசும், சரோஜா மூன்றாம் பரிசும் வென்றனர்.

புள்ளி கோலத்தில் மாலினி முதல் பரிசும், கீதா இரண்டாம் பரிசும், சரோஜினி மூன்றாம் பரிசும் வென்றனர்.

முருகன் உருவத்தை வரைந்து இருந்த வாசகி அபிநயா கூறுகையில், ''தமிழ் கடவுள் முருகனை மிகவும் பிடிக்கும். அதனால் ஓவியமாக தீட்டினேன்,'' என்றார்.

கல்கத்தா காளி உருவத்தை கோலமாக தீட்டியிருந்த வாசகி ரேகா தர்மராஜ் கூறும் போது, ''பெண்களை யாராவதும் சீண்டினால் காளியாக, துர்க்கையாக கோபம் கொண்டு எழவேண்டும்; இதுதான் என் கான்செப்ட்,'' என்றார்.

வாசகி சுபாஷினி, சிவனும், பார்வதியும் ஆருத்ரா தரிசனத்தில் நடனமாடும் காட்சியை வரைந்து இருந்தார். வாசகி லாவண்யா, ஆண்டாள் உருவத்தை தத்ரூபமாக கோலத்தில் வரைந்து அசத்தி இருந்தார். மாலினி அழகான புள்ளிக்கோலம் போட்டு, நடுவர்களை வியக்க வைத்தார். மாயா, ராதையின் ஓவியத்தை ரங்கோலியாக தீட்டி, அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.

அசோசியேஷன் தலைவர் செந்தில் கோவிந்த், செயலாளர் மதியழகன், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் போட்டியில் வென்ற வாசகியர்க்கு, பரிசு வழங்கி பாராட்டினர்.

இந்த மார்கழி விழா கோலத்தை தினமலர் நாளிதழுடன் போத்தீஸ், கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி, ஓட்டல் ஆனந்தாஸ் மற்றும் யாழி நிறுவனத்தார் இணைந்து வழங்கினர்.






      Dinamalar
      Follow us