/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' சார்பில் அபார்ட்மென்ட் கிரிக்கெட் அரையிறுதிக்கு 4 அணிகள் தேர்வு; நாளை நடக்கிறது பைனல்
/
'தினமலர்' சார்பில் அபார்ட்மென்ட் கிரிக்கெட் அரையிறுதிக்கு 4 அணிகள் தேர்வு; நாளை நடக்கிறது பைனல்
'தினமலர்' சார்பில் அபார்ட்மென்ட் கிரிக்கெட் அரையிறுதிக்கு 4 அணிகள் தேர்வு; நாளை நடக்கிறது பைனல்
'தினமலர்' சார்பில் அபார்ட்மென்ட் கிரிக்கெட் அரையிறுதிக்கு 4 அணிகள் தேர்வு; நாளை நடக்கிறது பைனல்
ADDED : அக் 02, 2025 11:06 PM

கோவை:'தினமலர்' நாளிதழின் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2025' நடத்தப்படுகிறது. நவஇந்தியா இந்துஸ்தான் கல்லுாரி, சி.ஐ.டி., கல்லுாரி, சங்கரா கல்லுாரி, காளப்பட்டி என்.ஜி.பி., கல்லுாரி மைதானங்களில் காலிறுதி போட்டிகள் நேற்று நடந்தன.
சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த முதல் போட்டியில், ஹோப்ஸ்-11 மற்றும் ஆர்.ஆர். துர்யா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹோப்ஸ்-11 அணி 76 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆர்.ஆர். துர்யா அணி 66 ரன் மட்டுமே எடுத்தது. ஆட்ட நாயகனாக ஹோப்ஸ்-11 அணியின் முபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாவது ஆட்டத்தில், செந்தில்கோல்டன் கேட் மற்றும் ஸ்பாண்டன் சார்க்ஸ் அணிகள் மோதின. செந்தில்கோல்டன் கேட் அணி 56 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஸ்பாண்டன் சார்க்ஸ் அணி 54 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக, செந்தில் கோல்டன் கேட் அணியின் சரவணன் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது போட்டி, ரெயின் ட்ராப்ஸ், ராஜ்குரு ஸ்டார் அணிகளுக்கு இடையே நடந்தது. ராஜ்குரு ஸ்டார் அணி 111 ரன் எடுத்தது. கடின இலக்கை துரத்திய ரெயின் ட்ராப்ஸ் அணி 58 ரன் மட்டுமே எடுத்தது. ஆட்ட நாயகனாக ராஜ்குரு ஸ்டார் அணியின் யாஷ்லி தேர்வு பெற்றார்.
நான்காவது போட்டியில், பி.ஜி.பி., 11, ஆர்.ஆர்., சாய் அபினவ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பி.ஜி.பி., 11 அணி, 95 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆர்.ஆர்., சாய் அபினவ் அணி, 52 ரன் எடுத்தது. ஆட்ட நாயகனாக, பி.ஜி.பி., 11 அணியின் மனோஜ் தேர்வானார்.
அரையிறுதி போட்டிக்கு ஹோப்ஸ்-11 அணி, செந்தில் கோல்டன் கேட் அணி, ராஜ்குரு ஸ்டார் அணி, பி.ஜி.பி., அணி ஆகிய நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. நாளை (அக்., 4) காலை சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் அரையிறுதி போட்டி நடைபெறும். அதன்பின், மூன்றாமிடம் மற்றும் நான்காமிடங்களுக்கான போட்டி நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து இறுதிப்போட்டி நடக்கிறது. முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. 'தினமலர்' நாளிதழ், 'பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேஷன்ஸ்' சார்பில், 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' போட்டி நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், 'வால்ரஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' ஆகியவை, கோ-ஸ்பான்சர்களாக கரம் கோர்த்துள்ளன.