ADDED : அக் 02, 2025 11:04 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சுற்றுலா, சொந்த ஊர் என பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து, திருட்டு சம்பவங்களை தடுக்க பூட்டிய வீடுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:-
தொடர் விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், வெகு நாட்கள் வீட்டை பூட்டி விட்டு செல்லும் சூழ்நிலையில், வீட்டின் பாதுகாப்பு கருதி
அப்பகுதிகளில் தொடர் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றோம்.
பூட்டிய வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதி பீட் போலீசாரிடம் லிஸ்ட் கொடுக்கப்பட்டு, தினமும் ரோந்து சென்று வீட்டின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.
வீட்டில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைத்திருப்பது அவசியம். அவை மொபைல் போன்களில் பார்க்கக்கூடிய வசதியுடன் இருந்தால் நன்றாகஇருக்கும்.
வெளியூர் செல்வோர் எங்களிடம் தகவல் தெரிவித்து செல்லலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.-