sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஆபர்களில் அள்ளலாம்! ஒரே கூரையின் கீழ் 'பர்ச்சேஸ்' செய்வதற்கு அருமையான வாய்ப்பு

/

இன்று துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஆபர்களில் அள்ளலாம்! ஒரே கூரையின் கீழ் 'பர்ச்சேஸ்' செய்வதற்கு அருமையான வாய்ப்பு

இன்று துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஆபர்களில் அள்ளலாம்! ஒரே கூரையின் கீழ் 'பர்ச்சேஸ்' செய்வதற்கு அருமையான வாய்ப்பு

இன்று துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஆபர்களில் அள்ளலாம்! ஒரே கூரையின் கீழ் 'பர்ச்சேஸ்' செய்வதற்கு அருமையான வாய்ப்பு


UPDATED : ஆக 15, 2025 08:10 PM

ADDED : ஆக 14, 2025 10:49 PM

Google News

UPDATED : ஆக 15, 2025 08:10 PM ADDED : ஆக 14, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, கோவையில் இன்று துவங்கியது; 18ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. ஒரே கூரையின் கீழ் இல்லத்துக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் அட்டகாசமான ஆபர்களில் வாங்குவதற்கு இதுவே பெஸ்ட் சாய்ஸ்.

கோவை கொடிசியா வளாகத்தில் 'ஏ', 'பி', 'சி' என, மூன்று அரங்குகளில் 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் சார்பில் இன்று (15ம் தேதி) துவங்கும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியை, கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். ஒன்றல்ல, இரண்டல்ல 300க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மலைக்க வைக்கும் ஆபர்களில் எல்லா பொருட்களும் அணி வகுக்கின்றன. குடும்பத்தில் உள்ள குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்கலாம்.

'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் உட்பட அனைத்து விதமான எலெக்ட்ரிகல் மற்றும் கிச்சன் கேட்ஜெட்கள் புத்தம் புது மாடல்கள் சிறந்த ஆபர்களில் உங்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கின்றன. குக்கீஸ்களை பேக் செய்ய உதவும் ஓ.டி.ஜி., முதல் சமையல் ராணிகளுக்கான எண்ணெய் இல்லாமல் பொரிக்கும் பிரையர், ஸ்டவ் குக்கர் வரை வெவ்வேறு ரகங்களில் முன்னணி பிராண்ட்களில் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

வீடுகளை அலங்கரிக்க டைனிங் டேபிள், வார்ட்ரோப், சோபா செட், ஊஞ்சல், டீ பாய், கட்டில், மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், கம்ப்யூட்டர் டேபிள், குட்டீஸ்கள் படிக்க ஸ்டடி டேபிள், வீட்டிலேயே அலுவலகம் போல் செயல்பட வொர்க் ஸ்டேஷன், கொசுத்தொல்லையை சமாளிக்கும் வலை, திரைச்சீலைகள் என, நீங்கள் பார்த்துப் பார்த்து வாங்க நினைக்கும் எல்லாப் பொருட்களும் கிடைக்கும்.

பாதி விலையில் பர்னிச்சர் மிக தரமான பர்னிச்சர்கள் நிலம்பூர் தேக்கு முதல் மகாகனி வரை தேர்ந்த மரங்களால் செய்யப்பட்டவை 50 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. சில பர்னிச்சர்களுக்கு 60 சதவீதம் வரை அட்டகாச ஆபர்கள் கிடைக்கின்றன. வீடும் நிறையும், மனசும் நிறையும்.

ஆடைகளுக்காக பிரத்யேக ஸ்டால்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான வண்ணங்களில், வித்தியாசமான வடிவங்களில் சேலைகள், சுடிதார், லெக்கின்ஸ், பலாஸோ, டி ஷர்ட் என இதுவரை கேள்விப்பட்டிராத டிசைன்களில் கூட கிடைக்கும். சின்னச்சின்ன பொட்டு முதல் காதணி வரை அழகுக்கு அழகு சேர்க்கும் அத்தனை பொருட்களும் அணிவகுக்கின்றன.

வீடு, மனை வாங்கலாம் சொந்தமாக ஒரு மனை, வீடு வாங்க, ஏராளமான புராஜக்ட்களை அள்ளிக் குவிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கும் பில்டு எக்ஸ்போவுக்காக பிரத்யேக ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அபார்ட்மென்ட், வில்லா, முதலீட்டுக்கான இடங்கள் என எல்லாமே இங்கு விசாரித்து வாங்கலாம். நிதியுதவிக்காக, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைக்கின்றன. இந்த ஷாப்பிங் திருவிழாவுக்காகவே பிரத்யேக ஆபர்களும் அள்ளித் தருகின்றனர்.

வாகன சந்தை 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் என்றாலே ஒரு குடும்பத்துக்குத் தேவையான எந்தவொரு பொருளையும் ஒரே இடத்தில் வாங்கி விட முடியும். அதுதானே நமக்கும் வேண்டும். டூ வீலர், கார் வாங்க நினைத்தாலும் வாங்கலாம். அதற்கேற்ப முன்னணி பிராண்ட்கள் அரங்குகள் அமைக்கின்றன. ஸ்டால்களில் புக்கிங் செய்தால், அதற்காக தனி ஆபர்களும் வழங்குகின்றன.

கிட்ஸ் ஜோன் சளைக்காமல் ஆட்ட ம்போடும் குழந்தைகளுக்காக, பொம்மைகள், புத்தகங்கள், தண்ணீர் விளையாட்டுகள், கார், பைக் அனுபவங்கள், பலுான் பங்களா என அடம் பிடிக்கு ம் குழந்தைகள் ஜாலியாக ஆட்டம்போட இருக்கவே இருக்கிறது கிட்ஸ் ஜோன்.

இப்பொருட்களை நீங்கள் வெளியே ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பார்க்க வேண்டும். 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் ஒரே இடத்தில் ஏராளமான சாய்ஸ்களுடன், சிறப்பம்சங்களையும், விலையையும் ஒப்பிட்டு வாங்கலாம். இந்த ஷாப்பிங் திருவிழா உங்களுக்கு நிச்சயம் மன நிறைவான அனுபவத்தைத் தரும். காலை, 10:30 முதல், இரவு, 8:00 ம ணி வரை தினமும் களைகட்டப்போகுது திருவிழா!

ரப்டி டூ குனாபா… சுவைத்தால் அட்டகாசம்பா!

வே ணுவின் மணமணக்கும் பிரியாணி , சைனீஸ் சிக்கன் விங்ஸ், சிக்கன் ரேப் என காரசாரமான அசைவம், பணியாரம் முதல், 99 வகை தோசைகள் வரை அசைவம், சத்தான சிறுதானிய உணவுகள் என வரிசை கட்டி பரிமாறக் காத்திருக்கின்றனர். மதுரை ஜிகர்தண்டாவைப் போலவே, புகழ்பெற்ற ராஜஸ்தானின் ரப்டியை ருசித்திருக்கிறீர்களா? உங்களுக்காகவே வரவழைத்திருக்கிறோம். பானிபூரி, பேல் பூரி, சேவ் பூரி, சீஸ் பாவ் பாஜி என குஜராத்தின் அசல் சுவையோடு கூடிய சாட் ஐட்டங்கள், இனிப்பில் இது தனி டேஸ்ட்பா என சொக்க வைக்கும் துருக்கியின் குனாபா வரை விதவிதமான தின்பண்டங்களை சுவைத்து மகிழலாம்.



கரம் கோர்ப்பவர்கள்!

கோவையில் 'தினமலர்' நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியை, அல்ட்ரா நிறுவனம், வுட் ஸ்பார்க், கோவை லட்சுமி, நியூ மென்ஸ், சுஜாதா மற்றும் ஆல்பா பர்னிச்சர், பேபர் ஆகிய நிறுவனங்கள் கோ ஸ்பான்சர்களாக கரம் கோர்க்கின்றன.








      Dinamalar
      Follow us