/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி: 64 வகை ஊறுகாய், 40 வகை ஸ்னாக்ஸ்!
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி: 64 வகை ஊறுகாய், 40 வகை ஸ்னாக்ஸ்!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி: 64 வகை ஊறுகாய், 40 வகை ஸ்னாக்ஸ்!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி: 64 வகை ஊறுகாய், 40 வகை ஸ்னாக்ஸ்!
ADDED : ஆக 16, 2025 11:30 PM

'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில், நொறுக்குத் தீனிக்கும் தின்பண்டங்களுக்கும் பஞ்சமே இல்லை. நுாற்றுக்கணக்கான வெரைட்டிகளில் வீட்டுக்கு அள்ளிச் செல்லலாம்.
மூங்கில் அரிசி அல்வா : கொடிசியா 'பி' அரங்கில், மூங்கில் அரிசியில் செய்யப்பட்ட அல்வா, பலாப்பழமும் பனை வெல்லமும் கலந்த அல்வா என, 16 வகையான அல்வாக்கள் விற்பனைக்கு உள்ளன. இவற்றில் செயற்கை நிறமிகள், ரசாயனங்கள் ஏதுமில்லை. நெய் பயன்படுத்தி செய்யப்பட்ட அல்வா சுவை உங்களை சொக்க வைக்கும். முழு உலர் பழங்கள், கொட்டைகளை கொண்டு செய்யப்பட்ட ஓமன் சாக்லேட்டுகளும் விற்பனைக்கு உள்ளன.
பஞ்சாபி பப்படம்: ராஜஸ்தான், பஞ்சாப்-ல் பிரபலமான பப்படங்கள் 15க்கும் மேற்பட்ட வகைகளில் விற்பனைக்கு இருக்கின்றன. ஹோம் மேட் சாக்லேட்கள், ஜார் கேக்குகள், பிரவுனி, பலதானிய பலகாரங்கள், ஊட்டி வர்க்கி, 90'ஸ் கிட்ஸ்களின் 'பேவரைட்' மிட்டாய்களும் உள்ளன.
64 வகை ஊறுகாய்: வடுமாங்காய் முதல் ஆந்திரா ஆவக்காய் வரை வினிகர் கலக்காத ஊறுகாய்கள் 64 வகைகளில் விற்பனைக்கு உள்ளன. மருந்து கலக்காத காய்கறிகள், மண்பானையில் ஊற வைத்து ஊறுகாய்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. காரசாரமான இட்லி பொடி, உலர்ந்த மாங்காய் உங்களை சுண்டியிழுக்கும்.
40 வகை நொறுக்ஸ்: நேந்திரப்பழ துண்டுகளை வெல்லத்தில் ஊற வைத்து தயாரித்த, 'சர்க்கரை வெட்டு' முதல் வெவ்வேறு வகை முறுக்கு, மிக்சர், சிப்ஸ், சீடை, மசாலா வேர்க்கடலை, பச்சைப்பயறு பிரை, என, 40 வகை நொறுக்குத்தீனிகளில் விதவிதமான சுவைகளில் விற்பனைக்கு உள்ளன.
சத்து மாவு: முளைகட்டிய பயறு வகைகள், கீரை விதைகள் என, 27 வகையான தானியங்கள் சேர்த்து செய்த சத்துமாவை, பாலில் கலந்து கஞ்சியாகவும், ரசத்தில் கலந்து சூப்பாகவும், சாதத்தோடு பொடியாகக் கலந்தும் உண்ணலாம். இவை தவிர, சிறுதானிய தின்பண்டங்கள், பிரண்டைத் தொக்கு, முருங்கை சூப், மூலிகைப் பொடிகள், ஏ2 மில்க் நெய் என ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.