/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': மைசூரு பேலஸ் ஊஞ்சல்!
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': மைசூரு பேலஸ் ஊஞ்சல்!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': மைசூரு பேலஸ் ஊஞ்சல்!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': மைசூரு பேலஸ் ஊஞ்சல்!
ADDED : ஆக 16, 2025 11:35 PM

'சாரதா எம்போரியம்' ஸ்டாலில், அழகிய வேலைப்பாட்டில் உருவான, ரூ.12 லட்சம் மதிப்புள்ள மைசூரு பேலஸ் டிசைன் ஊஞ்சல், சோபா, டைனிங் செட், கண்காட்சி ஆபராக ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3.25 லட்சம் மதிப்பிலான செட், ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனையாகிறது.
முழு டிஜிட்டலில், பில்டு இன் ஓவன் மிக நேர்த்தியான தயாரிப்புக்கு புகழ்பெற்ற பிராங்கி பேபர் ஸ்டாலில், முழுக்க டிஜிட்டல் திறன் கொண்ட பில்டு இன் ஓவன், 10 விதமான பங்சனில் வருகிறது. மைக்ரோவேவ் ஓவன் மற்றும் ஓவன் ஆகிய இரண்டும் இணைந்த 'காம்பி ஓவன்' சிறந்த சலுகையில் விற்பனைக்கு உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பாசெட்கள், 30 மாதங்களுக்கு இலவச சர்வீஸ் கொண்ட ஆர்.ஓ., என, பிராங்கி பேபர் ஸ்டாலில் வழக்கத்தை விட கூடுதல் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பேக்டரி விலையில் தேக்கு பர்னிச்சர் 'ஏ' அரங்கில் இடம்பெற்றுள்ள ஆல்பா பர்னிச்சர் ஸ்டாலில், நிலம்பூர் தேக்கில் செய்யப்பட்ட சோபா, கட்டில், டைனிங் டேபிள், புல் குஷன் சோபா உள்ளிட்ட பர்னிச்சர்கள், நல்ல வேலைப்பாடுடன், பேக்டரி அவுட்லெட் விலைக்கு தரப்படுகின்றன. ஸ்டாலில் புக் செய்து, வேறொரு நாளில் வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது. விருப்பத்துக்கேற்ப கஸ்டமைஸ் செய்து தருகின்றனர். கட்டில், வார்ட்ரோப், டிரெஸிங் டேபிள், சைடு டேபிள் அடங்கிய காம்போ 50 சதவீதம் வரை தள்ளுபடியில் தரப்படுகிறது.
கோவை லட்சுமி கிரைண்டர் 40 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கோவை லட்சுமி கிரைண்டர், 2, 3, 4 லிட்டரில், டேபிள் டாப் மற்றும் டில்டிங் என இரண்டு விதங்களிலும் எஸ்.எஸ்., மெட்டீரியலிலும் கிடைக்கிறது. இவற்றுக்கு ஒரு லிட்., மசாலா டிரம், சப்பாத்தி பிசைய மற்றும் தேங்காய் துருவும் உபகரணங்கள் இலவசம்.