/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பொதுமக்கள் சொன்னதென்ன!
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பொதுமக்கள் சொன்னதென்ன!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பொதுமக்கள் சொன்னதென்ன!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பொதுமக்கள் சொன்னதென்ன!
ADDED : ஆக 16, 2025 11:36 PM

திருப்தியாக இருந்தது
பல ஆண்டுகளாக 'தினமலர்' கண்காட்சிக்கு வருகிறோம். வருடா வருடம் போலவே இந்த வருடமும் ஏமாற்றவில்லை. நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஒரே இடத்தில் வித்தியாசமான பல உபயோகப் பொருட்களை வாங்கியது எனக்கு திருப்தியாக இருந்தது. கடைகளுக்கு அலையாமல், ஒரே இடத்தில் வாங்கினோம்.
- ஆர்.சம்பூர்ணா, காளப்பட்டி.
//
நிறைய பொருள் இருக்கு
பிற கண்காட்சிகளில் பெயருக்குத்தான் டிரஸ், அக்ஸசரீஸ் இருக்கும். இங்கு ஏராளமான ஸ்டால்கள் இருக்கின்றன. உள்ளூர் மட்டுமின்றி ராஜஸ்தான், சண்டிகர், கொல்கத்தா கலெக்சன்களையும் வாங்கினோம். கொஞ்சம் பணத்தில், நிறைய பொருட்களை வாங்க முடிந்தது.
- கே.அனுஷா, சுந்தராபுரம்.
//
தீபாவளி போல் ஷாப்பிங்
பொங்கல், தீபாவளி போல் 'தினமலர்' ஷாப்பிங் எங்களுக்கு ஒரு பண்டிகை. எல்லா வருடமும் குடும்பத்துடன் வந்து விடுவோம். ஸ்கூல், வீடு என இருந்த குழந்தைகளுக்கு ஒட்டகப் பயணம், புல், கார் டிரைவிங் என, குதுாகலமான விளையாட்டுகள் இருக்கின்றன.
- கே.எஸ்.சகஸ்ராம், எல்.ஐ.சி., காலனி.
//
பலவித உணவுகள் அருமை
அறிவைத் துாண்டும் புதிர் பொம்மைகள், சயின்ஸ் புராஜக்ட், வுட்டன் டாய்ஸ் எனக்கு மிகவும் பிடிச்சது. முட்டை மிட்டாய், ரப்டி, குனாபா என பலவித உணவுகளை ஒரே இடத்தில் இருப்பது நல்ல சாய்ஸ். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் இன்னும் கொஞ்சம் புதுமை இருந்திருக்கலாம்.
- எஸ்.பி.சஞ்சய், திருப்பூர்.
//
குடும்பத்தோடு வரலாம்
குவாலிட்டியான பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடிஞ்சது எனக்கு ரொம்ப சந்தோசம். வெறும் பர்ச்சேஸ் மட்டுமின்றி, திருப்தியான உணவு, குழந்தைகளுக்கு விளையாட்டு, கிளே பிளே, மருதாணி ஆக்டிவிட்டிகள் என, குடும்பமாக நேரத்தை போக்க சிறந்த இடம்.
- டி.பாரதுட்டன், ஊட்டி.