sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டி; வண்ண கோலங்களால் பிரமிக்க வைத்த வாசகியர்

/

தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டி; வண்ண கோலங்களால் பிரமிக்க வைத்த வாசகியர்

தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டி; வண்ண கோலங்களால் பிரமிக்க வைத்த வாசகியர்

தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டி; வண்ண கோலங்களால் பிரமிக்க வைத்த வாசகியர்


ADDED : ஜன 12, 2025 11:35 PM

Google News

ADDED : ஜன 12, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில் நடத்தப்பட்டு வந்த, 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி, நேற்று நடந்த மெகாப்போட்டியுடன், நிறைவு பெற்றது.

அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியர், இந்த கோலப்போட்டியில் பங்கேற்று புள்ளிக்கோலம், பூக்கோலம், மாக்கோலம் மற்றும் ரங்கோலி என, விதவிதமான கோலங்கள் போட்டு, பரிசுகளை வென்றனர். இந்த மார்கழி கோல விழாவின் இறுதியாக, மெகா கோலப்போட்டி , புரோஜோன் மால் வளாகத்தில் நேற்று நடந்தது.

மெகா கோலப்போட்டி குறித்து அறிந்து காலை முதலே, 200க்கும் மேற்பட்ட வாசகியர், வண்ண வண்ண கோலப்பொடிகளுடன் புரோஜோன் மால் வளாகத்தில் கூடினர். போட்டியாளர்கள் அனைவருக்கும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், காலை உணவு வழங்கப்பட்டது.

ரங்கோலியால் அசத்தல்


இந்த மெகா கோலப்போட்டியில், பெரும்பாலானோர் ரங்கோலி கோலங்களை வரைந்து இருந்தனர். சிலர் வித்தியாசமாக, நீர் ரங்கோலி கோலமும் வரைந்து, பிரமிக்க வைத்தனர்.

ஆண்டாள், கண்ணன் ராதை, விநாயகர், முருகன், சிவன் பார்வதி, துர்க்கை, அம்பிகை என, கடவுள் உருவங்களை ஓவிய ரங்கோலியாக வரைந்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பலர் பொங்கல் பானை, காளை, கரும்பு என, கோலம் வரைந்து அசத்தி இருந்தனர்.

சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வெப்பமடைந்து வருவதை, சித்தரிக்கும் விதமாக சிலர் விழிப்புணர்வு கோலம் போட்டு இருந்தனர்.

நடுவர்களுக்கு சவால்!


நடுவர்கள் புவனேஸ்வரி, நயன்தாரா, மீனா வெங்கட், ராதிகா ஸ்ரீதர் ஆகியோர், பரிசுக்குரிய கோலங்களை தேர்வு செய்தனர்.

கோலங்கள் ஒவ்வொன்றும் அழகாகவும், நேர்த்தியாகவும் ரசிக்கும்படி இருந்ததால், பரிசுக்குரிய கோலத்தை தேர்வு செய்வதில் நடுவர்கள் சிரமப்பட்டனர்.

பரிசு பெற்றவர்களுக்கு, சென்னை சில்க்ஸ் மீடியா மேனேஜர் வினோத், அல்ட்ரா கேர் சேவை பிரிவு தலைவர் செந்தில் நாதன், ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஸ்குமார், முழுநேர இயக்குனர் பிரதீப்குமார், புரோஜோன் மால் இயக்குனர் அம்ரிக் பனேசர், விற்பனை பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், தொழில்நுட்ப தலைவர் யஷ்வந்த் ராவ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்த மார்கழி விழாக்கோலப் போட்டியை, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.

அபார்ட்மென்ட்களை அலங்கரித்த கோலங்கள்


மவுன்ட் ரெய்ன்டிராப், சவுபர்னிகா ஸ்பான்டன் அபார்ட்மென்ட்களில், மனதை விட்டு மறையாத மார்கழி கோலங்களை வரைந்து, தினமலர் வாசகிகள் பரவசப்படுத்தினர்.

தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை இணைந்து, 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில், அபார்ட்மென்ட்களில் வசிக்கும் பெண்கள் புள்ளிக்கோலம், பூக்கோலம், மாக்கோலம் மற்றும் ரங்கோலி என, விதவிதமான கோலங்கள் போட்டு பரிசுகளை வென்றனர்.

மவுன்ட் ரெய்ன்டிராப் அபார்ட்மென்ட்


கோவை காளப்பட்டி ரோடு, நேரு நகர் வெஸ்ட் எல்.என்.நகர் பகுதியில் உள்ள மவுன்ட் ரெய்ன்டிராப் அபார்ட்மென்டில் நடந்த போட்டியில், 24 பேர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் ஆண்டாள் உருவத்தை, வாசகி உமா மிக அழகாக ரங்கோலியில் வரைந்து இருந்தார். வாசகி ஆர்த்தி பொங்கல் பானையையும், ஜல்லிக்கட்டு காளையையும் இணைத்து, பொங்கல் வாழ்த்து கோலம் வரைந்து இருந்தார்.

வாசகி சுவேதா சிவகுமார், புள்ளிக்கோலத்தில் கோவில் கோபுரத்தை தெய்வீகமாக சித்தரித்து இருந்தார். வாசகி சுகன்யா, பூக்கள் மற்றும் இலைகளை பயன்படுத்தி, கேரளாவின் பாரம்பரிய பூக்கோலம் போட்டு இருந்தார்.

வாசகி சிவரஞ்சனி, விவாகா பட்டுப்புடவையை ரங்கோலி கோலத்தில் வடித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வாசகி அபர்ணா, புள்ளிக்கோலத்தில் ஜிமிக்கி கம்மல் நெக்லஸ் வரைத்து அசத்தி இருந்தார்.

பூக்கோலத்தில் வாசகி சுகன்யா, புள்ளிக்கோலத்தில் ஸ்வேதா சிவகுமார், காயத்ரி, அபர்ணா ஆகியோர் பரிசு வென்றனர். ரங்கோலியில் வாசகியர் ஆர்த்தி அரவிந்தன், சிவரஞ்சனி, சிந்துஜா ஆகியோர் பரிசு வென்றனர். வாசகியர் உமா செந்தில், சுதாமதி, வினிதா ஆகியோரும் பரிசு பெற்றனர்.

சவுபர்னிகா ஸ்பான்டன் அபார்ட்மென்ட்


கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள, சவுபர்னிகா ஸ்பான்டன் அபார்ட்மென்டில், நடந்த கோலப்போட்டியில், 26 பேர் பங்கேற்று பூக்கோலம், புள்ளிக்கோலம் மற்றும் ரங்கோலி கோலங்கள் வரைந்து இருந்தனர். பொங்கல் ரங்கோலி கோலங்கள் அதிகம் இடம் பிடித்திருந்தன.

புள்ளிக்கோலம் போட்டு இருந்த வாசகி சவுபர்னிகா, பாரதி கண்ட புதுமை பெண்ணின் உருவத்தை புள்ளிக்கோலத்தில் வரைந்து அசத்தி இருந்தார். வாசகி ரம்யா, உப்பில் வரைந்து இருந்த 3டி கோலம் பார்வையாளர்களை கவர்ந்தது.

வாசகி சரண்யா வரைந்திருந்த பசுமை பூக்கோலம், வாசகி மோகனா ஹரினி வரைந்த ஆண்டாள் கோலம், வாசகி அகிலா சுகுணா வரைந்த பொங்கல் கோலம் என, அத்தனை கோலங்களும் அற்புதமாக இருந்தன.

பூக்கோலத்தில் வாசகியர் அனிதா, ஸ்ரீவாணி, நிர்மலா ஆகியோர் பரிசு பெற்றனர். புள்ளிக்கோலத்தில் வாசகியர் சவுபர்னிகா, லீனா, நிவேதா, ஆகியோர் பரிசு பெற்றனர். ரங்கோலியில் வாசகியர் ரம்யா, கல்பனா, குழந்தைகள் ஹரி, சாய், மீனாட்சி ஆகியோர் பரிசு பெற்றனர். வாசகியர் நுஷ்ரா, நர்த்திகா ஆகியோரும் பரிசு பெற்றனர்.

இந்த மார்கழி விழாக்கோலப் போட்டியை, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.






      Dinamalar
      Follow us