/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முடங்கிய பேட்டரி வாகனங்கள்: குப்பை சேகரிப்பதில் சிக்கல்
/
முடங்கிய பேட்டரி வாகனங்கள்: குப்பை சேகரிப்பதில் சிக்கல்
முடங்கிய பேட்டரி வாகனங்கள்: குப்பை சேகரிப்பதில் சிக்கல்
முடங்கிய பேட்டரி வாகனங்கள்: குப்பை சேகரிப்பதில் சிக்கல்
ADDED : அக் 26, 2025 11:22 PM

அன்னுார்: அன்னுாருக்கு பேட்டரி வாகனங்கள் ஒதுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அன்னுார் வட்டாரத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் நியமிக்கப்பட்டு பேட்டரி வாகனம் அல்லது சாதாரண மூன்று சக்கர வாகனத்தில் சென்று குப்பைகளை சேகரித்து திடக்கழிவு கொட்டகைக்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு தரம் பிரிக்கப்படுகிறது. இதில் பல ஊராட்சிகளில் பேட்டரி வாகனங்கள் போதுமான அளவு இல்லை. மிகவும் குறைவாகவே உள்ளன. சில பேட்டரி வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன. அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரித்துக் கொண்டு வர முடிவதில்லை. எனவே கூடுதலாக பேட்டரி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அன்னுார் ஒன்றியத்தில் ஏழு ஊராட்சிகளுக்கு, தலா 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது பேட்டரி வாகனங்கள் கடந்த மாதம் வழங்கப்பட்டன. எனினும் இந்த வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து பதிவெண் பெறப்படாததால் இரண்டு மாதங்களாக முடங்கி கிடக்கின்றன.
இது குறித்து முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்,' கிராம ஊராட்சிகளில் பேட்டரி வாகனங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் பேட்டரி வாகனங்கள் முடங்கி இருப்பதால் குப்பை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

