/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : அக் 17, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், வரும், 22ம்தேதி நடக்கிறது.
காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை மருத்துவ முகாம் நடக்கிறது. இதில், பலவகை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. தேசிய அடையாள அட்டை, கல்வி உதவி தொகை வழங்கல், உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இலவச அறுவை சிகிக்சை க்கு தேர்வு செய்தல், இலவச பஸ் பாஸ் வழங்கல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.