/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : அக் 29, 2024 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமில், 18 வயது வரையிலான, 102 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
20 மாணவர்களுக்கு புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மூன்று பேருக்கு அடையாள அட்டை மற்றும் மருத்துவச் சான்று புதுப்பிக்கப்பட்டது.