/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5,000 ரூபாய் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
5,000 ரூபாய் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
5,000 ரூபாய் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
5,000 ரூபாய் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 15, 2025 11:25 PM

கோவை; ''ரூ.5,000 உதவிதொகையை அரசு வழங்க வேண்டும்,'' என, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறியதாவது:
தற்போது பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, ரூ.500- லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தொகையை, ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கவும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை, இலவசமாக பெற, தேவையான ஆவணங்களை உடனடியாக வழங்கவும் வேண்டும்.
சட்டசபையில் வெளியிடப்பட்ட, அரசாணையின் முழுப்பயனையும் மாற்றுத்திறனாளிகள் உடனடியாக பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட, அனைத்து வகை மாற்றுத்திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஊர்தி பணப்பலனை, இரட்டிப்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

