ADDED : ஜன 20, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
கோவை: நல்லம்பாளையம் கணபதி அப்பன் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன், 49. இவரது மனைவி சுமதி, 44. இருவரும் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்.
இருவரும் அங்குள்ள தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் பணிபுரிந்தனர். நேற்று முன்தினம், இரவு 1.00 மணிக்கு துாக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவு உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
