ADDED : ஜன 09, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, பேரிடர் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில், இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பேரிடர் மேலாண்மை குறித்த செயல் விளக்கங்களை மாணவ, மாணவியர்களுக்கு வீரர்கள் எடுத்துரைத்தனர். மேலும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாந்தி, துணை முதல்வர் லட்சுமி பிரியா, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், காரமடை வட்டார வருவாய் ஆய்வாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.---

