/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
/
அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
ADDED : அக் 14, 2025 09:26 PM
அன்னுார்; பள்ளிகள், அரசு அலுவலகங்களில் தேசிய பேரிடர் மீட்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்க தீயணைப்புத்துறை அறிவுறுத்தியது.
இதன்படி அன்னுார் தீயணைப்பு நிலையம் சார்பில், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
இதில் வெள்ளம், தீ விபத்து, நெரிசல் என பல்வேறு இயற்கை மற்றும் மனித பேரிடர்களில் இருந்து தப்பிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பேரிடரை சமாளிப்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். துணை தாசில்தார் யாஸ்மின், வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.