/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சர் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்த தி.மு.க.,வினர்
/
அமைச்சர் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்த தி.மு.க.,வினர்
அமைச்சர் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்த தி.மு.க.,வினர்
அமைச்சர் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்த தி.மு.க.,வினர்
ADDED : அக் 14, 2025 09:27 PM
அன்னுார்; தி.மு.க.,வினர் 15 பேர் மத்திய அமைச்சர்எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., வில் பல்வேறு அணிகளில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அன்னுாரில் புதிய நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது. பிரதமர் மோடியின் திறமையான ஆட்சியால் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை எட்டும். 2047ல் உலகின் முதன்மையான நாடாக உருவாகும். புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் என வளர்ச்சிப் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கவுரவ நிதி வழங்கப்படுகிறது. வீடு இல்லாத நான்கு கோடி பேருக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. இன்னும் மூன்று கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன, என்றார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஆன்மிக அணி முன்னாள் மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார். பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கணேச மூர்த்தி வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க.,வை சேர்ந்த 15 பேர் பா.ஜ.,வில் மத்திய அமைச்சர் முன்னிலையில் இணைந்தனர்.