தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி

ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி

ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி


ADDED : ஜூன் 17, 2025 08:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 08:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; ஆனைமலை அருகே, ஆழியாறு அணைப்பகுதியில், 60 போலீசாருக்கு பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில், திடீரென வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து, போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கூடுதல் காவல்துறை இயக்குனர் செயலாக்கம் உத்தவரப்பட்டி, தமிழ்நாடு அதிதீவிர பயிற்சி பள்ளி எஸ்.பி., வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 60 போலீசாருக்கு மூன்று நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.

காமண்டோ பயிற்சி பள்ளி சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் மூன்று பயிற்றுநர்கள் தலைமையிலான குழுவினர், ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு செயல்விளக்கம் செய்து காட்டினர்.

முதலுதவி, தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பது மற்றும் விபத்துகளில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும். புயல், மழை காலங்களில் ரோடுகளில் மரங்கள் சாய்ந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மரங்களை வெட்டும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கப்பட்டது.

மேலும், அடிப்படை பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆயுதப்படை டி.எஸ்.பி., வாயிலாக தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us