/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரிடர் அபாயக்குறைப்பு பயிற்சி வகுப்பு
/
பேரிடர் அபாயக்குறைப்பு பயிற்சி வகுப்பு
ADDED : பிப் 13, 2025 11:59 PM
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த பிப்.,10, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரி சார்பாக பேரிடர் அபாயக்குறைப்பு மற்றும் மீட்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
இப்பயிற்சி வகுப்பில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளை சேர்ந்த முதுநிலை அலுவலர்கள், இடை நிலை அலுவலர்கள் தலா 30 பேர் வீதம் 60 அலுவலர்கள் பங்கேற்றனர்.
அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லுாரியின் பயிற்சி இயக்குனர் டாக்டர் அரசுசுந்தரம், பொறியாளர் இளங்கோவன், டாக்டர் ராம்மோகன், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு உதவி கமாண்டன்ட் முத்துகிருஷ்ணன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் பெஞ்சமின் மற்றும் துரைராஜன், துணை இயக்குனர் (தொழிற்சாலைகள் பாதுகாப்பு) ஆகியோர் பங்கேற்று பயிற்சி வகுப்புகள் நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா பங்கேற்றார்.