ADDED : ஜன 01, 2025 05:13 AM
கோவை : புத்தாண்டை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா சார்பில், சிறப்பு புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
நேரு ஸ்டேடியம் மற்றும் டவுன்ஹால் நுாலக ஆணைக்குழு கட்டட வளாகத்தில் நடக்கும் இந்த சிறப்பு புத்தக கண்காட்சியில், குழந்தை நுால்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் வரலாறு, கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, சட்டநுால்கள், வேளாண்மை அறிவியல் உள்ளிட்ட பல தலைப்புகளில், பல ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு, 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடக்கும், இந்த புத்தக கண்காட்சி காலை, 9:30 முதல் இரவு 9:00 மணி வரை, திறந்து இருக்கும்.
இந்த தகவலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் குணசேகர் தெரிவித்துள்ளார்.

