/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோய் தாக்குதல்; பீட்ரூட் சாகுபடி பாதிப்பு அறுவடையை தவிர்க்கும் விவசாயிகள்
/
நோய் தாக்குதல்; பீட்ரூட் சாகுபடி பாதிப்பு அறுவடையை தவிர்க்கும் விவசாயிகள்
நோய் தாக்குதல்; பீட்ரூட் சாகுபடி பாதிப்பு அறுவடையை தவிர்க்கும் விவசாயிகள்
நோய் தாக்குதல்; பீட்ரூட் சாகுபடி பாதிப்பு அறுவடையை தவிர்க்கும் விவசாயிகள்
ADDED : பிப் 13, 2025 09:36 PM

பொள்ளாச்சி, ; நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த, மருந்து தெளித்தும் பயனில்லாததால், விவசாயிகள் பீட்ரூட் அறுவடையை தவிர்த்தும் வருகின்றனர்.
மலைப் பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி அருகே ஆலம்பாளையம், நெகமம் உள்ளிட்ட பல பகுதிகளில், சொட்டுநீர் பாசனம் வாயிலாக பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது.
இருப்பினும், தற்போது நிலவும் வெயில் காரணமாக, பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் செடிகளில், மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விதைகளின் முளைப்புத்திறன் பாதிப்பு, நுனி கருகல் போன்ற காரணங்களால் செடிகளின் இயல்பான வளர்ச்சி குறைந்துள்ளது. நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த, மருந்து தெளித்தும், பயனில்லாததால், விவசாயிகள் சிலர், பீட்ரூட் அறுவடையை தவிர்த்தும் வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: சந்தைக்கு கொண்டு சென்று, பீட்ரூட் விற்பனை செய்வதற்கு ஏதுவாக, வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில், சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.
பீட்ரூட் சாகுபடி செய்தால், 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதனால், விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என, ஏக்கருக்கு 55 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
கோடையில் பீட்ரூட் மகசூல் குறைந்தும், குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து, தண்ணீரின்றி பல இடங்களில் மகசூல் குறைந்துள்ளது. இதுதவிர, நோய் பாதிப்பால், விவசாயிகள் பீட்ரூட் அறுவடையை தவிர்த்து விடுகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.