/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருக்கலைப்பு மாத்திரை விற்றால் மருந்துக்கடையின் உரிமம் ரத்து; மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடும் எச்சரிக்கை
/
கருக்கலைப்பு மாத்திரை விற்றால் மருந்துக்கடையின் உரிமம் ரத்து; மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடும் எச்சரிக்கை
கருக்கலைப்பு மாத்திரை விற்றால் மருந்துக்கடையின் உரிமம் ரத்து; மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடும் எச்சரிக்கை
கருக்கலைப்பு மாத்திரை விற்றால் மருந்துக்கடையின் உரிமம் ரத்து; மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடும் எச்சரிக்கை
ADDED : செப் 26, 2024 11:48 PM
கோவை : டாக்டர்கள் பரித்துரை சீட்டியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யும் மருந்துக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கோவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டாக்டரின் பரித்துரையின்றி கருக்கலைப்பு மாத் திரைகளை விற்பது, சட்ட படி குற்றமாகும். இந்த விதிகளை மீறும் மருத்துக்கடைகளுக்கு சீல் வைத்தல், மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்தல் மற்றும் மருந்துக்கடை உரிமையாளரை போலீசார் வாயிலாக கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோவை மருத்து கட்டுப்பாட்டு துறை மற்றும் கோவை மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குனர் இணைந்து டாக்டரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் பல முறை கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் விதிமுறையை மீறி கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கிய கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள குமரன் மெடிக்கல் சென்டரில் கோவை மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி, டாக்டர் சரவணபிரகாஷ் மற்றும் உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் குருபாரதி, மருத்துகள் ஆய்வாளர் திலகவதி ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர்.
இதில் குமரன் மெடிக்கல் சென்டரின் உரிமையாளர் திருச்சியிலிருந்து தனிநபர் வாயிலாக சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குமரன் மெடிக்கல் சென்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், டாக்டரின் பரிந்துரை சீட்டுன்றி கருக்கலைப்பு மாத்திரை விற்கும் மருந்துக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மருந்துக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கோவை உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் குருபாரதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.