/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரியாணி ஓட்டலில் தகராறு; உரிமையாளர் உட்பட மூவர் கைது
/
பிரியாணி ஓட்டலில் தகராறு; உரிமையாளர் உட்பட மூவர் கைது
பிரியாணி ஓட்டலில் தகராறு; உரிமையாளர் உட்பட மூவர் கைது
பிரியாணி ஓட்டலில் தகராறு; உரிமையாளர் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 24, 2025 08:38 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட மூவரை தாக்கிய, ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சித்திக், 35. இவர், நண்பருடன் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் சூளேஸ்வரன்பட்டி அருகே உள்ள பிரியாணி ஓட்டலில் சாப்பிட சென்றார்.
சாப்பிட்ட பின், பணம் செலுத்த ஏ.டி.எம்., கார்டு வசதியில்லையா என கேட்ட போது, கடை உரிமையாளர் நிஜாம்க்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்திக் உள்ளிட்டோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சித்திக் அவரது சகோதரர் ஜெயலானிக்கு தகவல் கொடுத்தார். ஜெயலானி, அவரது நண்பர் ஜெயினாலுபுதின் என்பவருடன் வந்து, எப்படி அடிக்கலாம் என நிஜாமிடம் கேட்டனர்.
அப்போது, கடை உரிமையார் நிஜாம், 40, பரோட்டோ மாஸ்டர்கள் சத்யராஜ்,36, வீரானன்,38 ஆகியோர், இங்கு வந்து பிரச்னை செய்கிறீர்களா என கேட்டு அருகில் இருந்த கட்டையால், சித்திக், ஜெயலானி, ஜெயினாலுபுதின் ஆகியோரை தாக்கினர்.
காயமடைந்த மூவரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடை உரிமையாளர் நிஜாம் மற்றும் பரோட்டா மாஸ்டர்கள் சத்யராஜ், வீரானன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

