/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.வெ.க., நிர்வாகிகளுக்குள் தகராறு; போதையில் தாக்குதல்
/
த.வெ.க., நிர்வாகிகளுக்குள் தகராறு; போதையில் தாக்குதல்
த.வெ.க., நிர்வாகிகளுக்குள் தகராறு; போதையில் தாக்குதல்
த.வெ.க., நிர்வாகிகளுக்குள் தகராறு; போதையில் தாக்குதல்
ADDED : ஜூன் 30, 2025 10:57 PM
கோவை; கோவை, ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 30; த.வெ.க., வார்டு செயற்குழு உறுப்பினர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர்கான், 25. அதே கட்சியின் துணை உறுப்பினராக உள்ளார்.
டிரைவரான இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். இந்நிலையில் வார்டு செயற்குழு உறுப்பினரான தன் பேச்சை ஜாகிர்கான் கேட்காததால், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
நேற்று முன்தினம், அருண்குமார், ஜாகீர்கான், அவர்களது நண்பர் பாலா ஆகிய மூவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் இரவு பாலாவுடன், அருண்குமார் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஜாகீர்கான், அருண்குமாரை தாக்கினார். அருண்குமாருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அருண்குமார் புகாரின்பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து ஜாகீர்கானை சிறையில் அடைத்தனர்.