/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன சோதனையில் தகராறு; பைக் வாலிபருக்கு சிறை
/
வாகன சோதனையில் தகராறு; பைக் வாலிபருக்கு சிறை
ADDED : ஜூலை 29, 2025 08:46 PM
கோவை; வாகன சோதனையின் போது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, ராமநாதபுரம் போலீசார் நேற்று முன்தினம் மாலை சுங்கம் புலியகுளம் மெயின் ரோட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை, ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். வாலிபர் நிறுத்தாமல் சென்றார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வழியாக வந்தார். சோதனையில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசாருடன் தகராறு செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக, ஏட்டு அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாலிபர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா, 26 என தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.