/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி நகராட்சி சீரமைக்காததால் அதிருப்தி
/
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி நகராட்சி சீரமைக்காததால் அதிருப்தி
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி நகராட்சி சீரமைக்காததால் அதிருப்தி
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி நகராட்சி சீரமைக்காததால் அதிருப்தி
ADDED : டிச 24, 2024 10:31 PM

வால்பாறை; வால்பாறையில், பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியால், சேடல்டேம் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம். பகுதியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வால்பாறை நகராட்சி சார்பில், மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், பாதுகாப்பில்லாத குடிநீர் வினியோகத்தால், இப்பகுதி மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது:
வால்பாறை நகராட்சியில், 8வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சேடல்டேம் உள்ளது. நகராட்சி சார்பில் இந்தப்பகுதியில் எந்த வளர்ச்சிப்பணியும் முறையாக மேற்கொள்வதில்லை. பல இடங்களில் தெருவிளக்குகள் கூட எரிவதில்லை.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திறந்தவெளி குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல், சேறும், சகதியுமாக உள்ளது. திறந்தவெளியில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகள் தொட்டியில் விழுந்தால் கூட தெரிவதில்லை.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில் மட்டுமே வளர்ச்சிப்பணிகளில் அக்கறை காட்டும் நகராட்சி அதிகாரிகள், மற்ற வார்டுகளிலும் போதிய அக்கறை காட்ட வேண்டும். வரி வசூலில் மட்டும் தீவிரம் காட்டும் நகராட்சி அதிகாரிகள், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுவதில்லை' என்றனர்.
வார்டு கவுன்சிலர் இந்துமதியிடம் கேட்டபோது, ''எனது வார்டை பொறுத்தவரை மக்கள் பிரச்னைகளை நேரில் கேட்டறிந்து, உடனுக்குடன் பணிகள் நடக்கிறது. சேடல்டேம் பகுதியை பொறுத்த வரை, குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி செய்த ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யாததால், இந்த பிரச்னை உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனரிடம் தெரிவித்து, சேதமடைந்த குடிநீர் தொட்டிகள் உடனடியாக நகராட்சி சார்பில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.