/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருக்குலைந்த ரோட்டை சீரமைக்காததால் அதிருப்தி
/
உருக்குலைந்த ரோட்டை சீரமைக்காததால் அதிருப்தி
ADDED : ஜன 18, 2024 12:45 AM

வால்பாறை : வால்பாறை, தாய்முடி எஸ்டேட் செல்லும் ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், சோலையாறு சித்தி விநாயகர் கோவில் அருகில் தாய்முடி எஸ்டேட் மேல்பிரட்டு அமைந்துள்ளது. 5 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டில் பல்வேறு போராட்டத்திற்கு பின், 3 கி.மீ., துாரம் வரையிலான ரோடு, நகராட்சி சார்பில் சமீபத்தில் போடப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள 2 கி.மீ., துாரம் உள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில், 'தாய்முடி பிரிவில் இருந்து சந்தன மாரியம்மன் கோவில் வரை நகராட்சி சார்பில் ரோடு போடப்பட்டுள்ளது. அங்கிருந்து, 2 கி.மீ, துாரம் உள்ள ரோட்டை சீரமைக்காததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் ரோட்டை நகராட்சி சார்பில் மழை காலத்திற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.