/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகள் ரோட்டில் உலா கட்டுப்படுத்தாததால் அதிருப்தி
/
கால்நடைகள் ரோட்டில் உலா கட்டுப்படுத்தாததால் அதிருப்தி
கால்நடைகள் ரோட்டில் உலா கட்டுப்படுத்தாததால் அதிருப்தி
கால்நடைகள் ரோட்டில் உலா கட்டுப்படுத்தாததால் அதிருப்தி
ADDED : ஏப் 25, 2025 11:24 PM
வால்பாறை:வால்பாறை நகரில் கால்நடைகளின் நடமாட்டத்தால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் அதிகளவில் சுற்றுகின்றன. ஆடு, மாடு, தெருநாய் போன்றவை நடுரோட்டில் உலா வருவதால், மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமலும், ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகளின் நடமாட்டத்தால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கால்நடைகளை கட்டுப்படுத்த, வால்பாறை நகராட்சி நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில், ரோடு மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமீப காலமாக, ரோட்டிலேயே கால்நடைகள் அதிகம் நடமாடுவதால், மக்கள் ரோட்டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரோட்டில் கேட்பாரற்று சுற்றும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்ய வேண்டும். கால்நடைகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.