/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
/
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
ADDED : பிப் 05, 2024 12:54 AM
பொள்ளாச்சி, பிப். 5-
''தி.மு.க., ஆட்சி மீது மக்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளது,'' என, பொள்ளாச்சியில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகர பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் நடந்தது. நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
பொள்ளாச்சி நகரப்பகுதியில், 88 பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டியினர், தீவிரமாக செயல்பட வேண்டும். வீடு, வீடாகச்சென்று சரிபார்க்க வேண்டும்.
எதிரிகள் புறமுதுகு காட்டி ஓடும் சூழல் உள்ளது. விடியல் தருவதாக கூறிய தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வேதனையில் தான் மூழ்கி உள்ளனர்.
மின்கட்டண உயர்வால், சிறுகுறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்படுவதால், தமிழகத்தில் அவை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜல்லி, கிராவல், சிமெண்ட் விலை உயர்வால் கட்டட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது.
எனவே, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. மக்களிடம், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 100 சதவீதம் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
தற்போது நேரம் கூடி வருவதால், நாம் பணியை தீவிரப்படுத்த வேண்டும். கட்சியினர் வீடு, வீடாகச்சென்று வாக்காளர் பட்டியல்களை சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

