sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மைதானத்தை சீரமைக்காததால் அதிருப்தி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

/

 மைதானத்தை சீரமைக்காததால் அதிருப்தி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

 மைதானத்தை சீரமைக்காததால் அதிருப்தி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

 மைதானத்தை சீரமைக்காததால் அதிருப்தி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


ADDED : மார் 11, 2026 06:42 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில், நகராட்சி விளையாட்டு மைதானத்தை சீரமைக்காவிட்டால், கலெக்டர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என, கால்பந்து சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள, நகராட்சி விளையாட்டு மைதானம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் நலன் கருதி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க கோரி, வால்பாறை கால்பந்து சங்கத்தின் சார்பில் கடந்த மாதம், 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆனால், இது வரை நகராட்சி சார்பில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இதனால், அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

வால்பாறை கால்பந்து சங்கத்தலைவர் பிரமேஷ், பொருளாளர் ராஜேஸ் ஆகியோர் கூறியதாவது:

வால்பாறை நகராட்சியில், மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியும், நகராட்சி சார்பில் செய்துதரப்படுவதில்லை.

வால்பாறை நகரில் உள்ள நகராட்சி விளையாட்டு மைதானத்தில் ஆண்டு தோறும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.ஆனால், விளையாட்டு மைதானம் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி விளையாட்டு மைதானத்தில், பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சியும் சங்கத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை உள்ளது. உடனடியாக, நகராட்சி சார்பில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்காவிட்டால், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us