/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் திருவிழா பூவோடு எடுத்து வழிபாடு
/
மாரியம்மன் திருவிழா பூவோடு எடுத்து வழிபாடு
ADDED : மார் 11, 2026 06:41 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 21வது வார்டில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 21வது வார்டு சார்பில், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், நுாற்றுக்கணக்கானோர் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, பூவோடு எடுப்போருடன் வரும் பொதுமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில், இளநீர், ரோஸ் மில்க், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி அருணாசலம் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுப்பான்மை பிரிவு இணை செயலாளர் ராஜ்கபூர், மாவட்ட ஜெ. பேரவை நிர்வாகி மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

